Posts

கல்யாணமே வைபோகமே - A Tale of silk sarees

  கல்யாணமே வைபோகமே கஸ்தூரிக்கு   கல்யாணம். மாசி மாசத்து சுக்லபக்க்ஷ முஹூர்த்தம் . ஆச்சு , இப்பவே ஐப்பசி மாசம் வந்தாச்சு. இன்னும் மூணு மாசம் தான் இருக்கு.  மாப்பிள்ளையாத்துக்கார டில்லிக்காரா  . பூர்வவீகம் என்னவோ வெண்ணாத்தங்கரை கச்சமங்கலம்  தான் . தாத்தா விஸ்வநாத ஐயர் , மங்களம் பாட்டி , லலிதா அத்தை (married to திண்ணியம் சுப்பிரமணியம் வகையறா ) , சித்தப்பா பாலசுப்ரமணியன் , என எல்லாரும் திருச்சி , மெட்ராஸ்ல தான் இருக்கா .மாப்பிள்ளையோட அப்பா வைத்தியநாத ஐயர் க் கு மத்திய அரசு வேலை (Defence accounts) . அதனால , டில்லி வாசம்.  கல்யாண மாப்பிள்ளை முரளி விஸ்வநாதன் பிறந்தது தஞ்சை மாவட்டம் , வளர்த்தது எல்லாம் டில்லி தான். அவருக்கு திருச்சி , தஞ்சாவூர் ஜில்லா ,   is just summer holidays retreat. மாப்பிள்ளை முரளி , ஒரு வருவாய்த்துறை அதிகாரி ( IRS ). நல்ல வேலை . ஆராடி உயரம் ,   பாக்க நான்னா இருப்பான்.  நம்ம கஸ்தூரியும் , நடராஜ மாமாக்கு ஒரே பெண் . நல்ல அழகு என்பதை விட , நேர்த்தியான உடல்வாகு , மாநிறம் , அம்சமான பெண் . commerce graduate . நன்னா ப...
Recent posts