கல்யாணமே
வைபோகமே
கஸ்தூரிக்கு கல்யாணம். மாசி மாசத்து சுக்லபக்க்ஷ முஹூர்த்தம். ஆச்சு, இப்பவே ஐப்பசி மாசம் வந்தாச்சு. இன்னும் மூணு மாசம் தான் இருக்கு.
மாப்பிள்ளையாத்துக்கார டில்லிக்காரா . பூர்வவீகம் என்னவோ வெண்ணாத்தங்கரை கச்சமங்கலம் தான். தாத்தா விஸ்வநாத ஐயர் , மங்களம் பாட்டி, லலிதா அத்தை (married to திண்ணியம் சுப்பிரமணியம் வகையறா ) , சித்தப்பா பாலசுப்ரமணியன், என எல்லாரும் திருச்சி, மெட்ராஸ்ல தான் இருக்கா .மாப்பிள்ளையோட அப்பா வைத்தியநாத ஐயர்க்கு மத்திய அரசு வேலை (Defence accounts). அதனால, டில்லி வாசம்.
கல்யாண மாப்பிள்ளை முரளி விஸ்வநாதன் பிறந்தது தஞ்சை மாவட்டம், வளர்த்தது எல்லாம் டில்லி தான். அவருக்கு திருச்சி,தஞ்சாவூர் ஜில்லா, is just summer holidays retreat.
மாப்பிள்ளை முரளி, ஒரு வருவாய்த்துறை அதிகாரி (IRS). நல்ல வேலை . ஆராடி உயரம், பாக்க நான்னா இருப்பான்.
நம்ம கஸ்தூரியும், நடராஜ மாமாக்கு ஒரே பெண் . நல்ல அழகு என்பதை விட, நேர்த்தியான உடல்வாகு , மாநிறம் , அம்சமான பெண் . commerce graduate. நன்னா பாடுவா. பாரதநாட்ய அரங்கேற்றம் கூட பண்ணிருக்கா.அவா அம்மா லட்சுமி குடும்பப்பாங்கான, பெண்மணி .நல்ல பத்ததி தெரிஞ்சவா. The family is Well aligned to culture and norms. இந்த சம்மந்த காரர்கள்,ஒருத்தருக்கு ஒருத்தர் தூரத்து சொந்தமும் கூட . மனமொத்து , ஜாதகம் ஒத்து நடந்தேறும் கல்யாணமிது.
சரி, இப்போ இந்த கல்யாண காரியங்கள் பத்தி பேசுவோம். கல்யாண பெண் , மாப்பிள்ளை, சம்மந்தி பேர் , தயாதிக்கார, மச்சுனர், கொழுந்தன் , ஓர்படி, அத்தை , அத்திம்பேர், சித்தி ,சித்தப்பா, அம்மாஞ்சி, அத்தங்கா, அம்மங்கா , சொந்தம், பந்தம், நட்பு , ஊரார் எல்லோரும் ஒருமிச்சு பண்ணற மங்கள காரியம் கல்யாணம்.
மித்ததில் உக்கார்ந்துண்டு விசாலி அத்தங்காவும் , உமா அம்மங்காவும், பக்கத்தாத்து சுசீலாவும் பட்டுப்புடவை அம்மசங்களை பத்தி பேசலானார்கள் . கூட லெச்சு பாட்டி . பாட்டி மணித்தக்காளி (மோனத்தக்காளி என்பர் ) கீரை ஆஞ்சிண்டிருந்தா. அவர்கள் புடவையின் பேட்டுக்கள் பற்றி பேசலாயினர்.
அடீ உமா , உன் ஜானவாச புடவை கரையில் (Border) அன்ன பட்சி பேட்டு தானே? புடவை...கண்ணுலயே நிக்கறது டீ என்றாள் விசாலி - நல்ல மாம்பழ நிறத்தில் அரக்கு நிற கரை போட்ட புடவை . அம்மாம்கா என்றாள் உமா, மங்களத்துக்கு தான் மயில்பேட்டு, ஆனால் வெளிர் பச்சை நிறம் . இப்படியாக சம்பாஷணை தொடர்ந்தது.
கிளிபேட்டு , இருதலைபக்க்ஷி பேட்டு, ருத்ராக்ஷம் பேட்டு , கம்பி பேட்டு , யானைபேட்டு , ஒரு வரி பேட்டு , கெட்டி பேட்டு , மாங்காய் பேட்டு , யாளி பேட்டு, சிம்மம் ,மான், குயில்கண் / மயில்கண் பேட்டு,கமலம் ( புண்டரிகம் ), பொடி கட்டம், வைரஊசி , வரிக்கட்டம் , புளியம் கொட்டை கட்டம் ,வாழைப்பூ பேட்டு ( now called as Temple Tower border), கொடி விசிறி , மல்லிகை மொக்கு என்று பல கல்யாண புடவைகளை (designs) பற்றிய சம்பாஷணை தொடர்ந்தது.
சுசீலாவின் க்ரிஹப்ரவேச புடவை , வரிக்கட்டம் , கத்திரிப்பூ நிறம் . கெட்டிக்கரை , ரெட்டப்பேட்டு . அந்த புடவையை நலங்குக்கு கட்டிண்டா சுசீலா. இதை ஒட்டி உமா அம்மங்காவுக்கும் அதே புடவை கருநீல நிறத்துல வாங்கினா . அது அவள் ஊஞ்சல் புடவையா கட்டிண்டா .
These borders and inline designs were a plethora of assorted Motifs and patterns which were of labyrinthine geometric shapes, floral, birds and animal arrangements embellished paisley designs and abstract representations woven with Zari or jarigai (ஜரிகை), which are usually metallic gold or silver in colour.
மாலை - புஷ்பம் , பட்டு புடவைகள் , ஆபரணங்கள், வெள்ளி பாத்திரம், மாப்பிள்ளை சீர், சீர்பட்சணங்கள், அங்குமணிசீர் , பருப்புத்தேங்காய் , நிறைந்திருக்க கடவது என்று யாரோ ஆணையிட்டு விட்டதை போல இன்றும் நம்மவா கல்யாணங்கள்ல முக்கிய அங்கங்களாக இன்னிக்கும் நடக்கறது. இந்த வரிசையில (On the list) நம்ம இப்போ ஜவுளி மட்டும் பார்ப்போம்......அதுவும் பட்டு புடவைகள்...
எந்த சுப காரியங்கள் ஆனாலும், மகிழ்ச்சியான நிகழ்ச்சி என்றாலும், அதில் பட்டு இல்லாமல் இருக்காது. Again , this is an ingrained practice of the Indian
culture, and an universal unwritten rule...
கஸ்தூரி கல்யாணத்துக்கு கஞ்சிவரம், திருபுவனம் மற்றும் சேலம் பட்டு வாங்கினா.ஒன்பது கஜ புடவைகள் எல்லாம் காஞ்சிப்புரம். Also, Reception புடவை, மற்றும் சோபானத்துக்கு புடவை, காஞ்சிபுரம் தான்.
த்ரிபுவனத்தில, கஸ்தூரியின் மாமா மிட்டாதார் ப்ரணதார்த்திஹர ஐயர் ஊஞ்சல் புடவையும், நலங்கு புடவையும் வாங்கிண்டு வந்தா.
மாமியார்
ஆத்துல க்ருஹப்ரவேச புடவை பனாரஸ் பட்டுல வெளிர் பச்சையில் - பிஸ்தா நிறத்தில்
வாங்கிண்டு வந்தா.
அந்த புடவையில் பார்டர் இல்லை ஆனால் வெள்ளி ஜரிகையில் அன்னப்பட்சி ஓருசீரா புடவை
முழுக்க இருந்தது.
ஜானவாச/ நிச்சியதார்த்த புடவை ஆனந்தா நீலத்தில் , சிகப்பு கரை. மதராஸ் நல்லியில் கஞ்சுவராம் sectionல் வாங்கினாளாம். நாத்தனார் எதிர் சீர் பட்டு புடவை, சம்மந்தி பட்டு புடவை , பக்கத்துக்கு உறவுகளுக்கு புடவை எல்லாம் சேலம் கொண்டலாம்பட்டியில் வாங்கினா.
அப்புறம், இளம்பிள்ளைக்கு போய் மற்ற உறவுகளுக்கு புடவை வாங்கினா . வேஷ்டிக்கள் அம்புட்டும் சேலம் அம்மாபேட்டை பாட்நூல்கார நெசவுல
வாங்கினது.
கூரப்புடவை வழக்கம் போல அரக்கு தான். .சம்மந்தி ரெண்டுபேரும் இலைப்பச்சையிலும், மீனாட்சி பச்சையிலும் அரக்கு நிற , ருத்திராக்ஷ பேட்டு கறை, போட்ட புடவை வாங்கிண்டா. அதை தவிர, முரளியின் அம்மா மிளகாய்ப்பழ சிவப்பில் , கருநீல பெரிய கரை காஞ்சி பட்டு வாங்கிண்டா. கஸ்தூரியின் அம்மா லக்ஷ்மியும் ராமர் பச்சையில் பட்டுரோஜா நிற புடவை வாங்கிண்டா. அப்போதெல்லாம், ரவிக்கை தனியா தான் வாங்கணும். ஆகையால், அது ஒரு தனி வேட்டையாவே இருந்தது.
கஸ்தூரியின் அத்தை சீதாக்கு, வாங்கினப புடவை கிட்டத்தட்ட ஜவ்வு மிட்டாய் நிறம், அதுக்கு தாமரை பூ நிறம் கரையிட்டிருந்தது . அகல Border. உடல்முழுக்க புட்டா போற்றிருந்தது.
அவா மாமா ப்ரணதார்த்திஹர ஐயர் வாங்கிண்டு வந்த ஊஞ்சல்
புடவை கத்தரிப்பூ நிறம், வைரஊசி ஜரிகை. மாமாவின் மிராசு பவுஸை உசக்க எடுத்து
காட்டிடுத்து அந்த
புடவை. சோபனத்துக்கு வெளிர் மஞ்சளில் ( Ivory/ off-white) மயில் கழுதுநிற கரை. தலப்பு அவ்வளவு அழகு. அவா
கல்யாணத்தன்னிக்கு, ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில தேவதையாய் /
ராஜகுமாரனாய் தோற்ற்றமளித்தார்கள்
கஸ்தூரியும் , முரளியும்.
சேலத்தில் மத்தவாளுக்கும், எதிசீர் செய்யவும் பல விலைபட்டியலுடன் இளம்பிள்ளையிலும், சிந்தாமணியூரிலும் நெய்யறதுக்கு ஆர்டர் கொடுத்துட்டா.
வெங்காய நிறம், ஊதா நிறம்,ஆனந்த நீலம் , ராமர் பச்சை, கருநீலம், வெளிர்நீலம் , அறக்கு, சந்தன நிறம், வெள்ளை, பச்சை, சிகப்பு, மிளகைப்பழ நிறம், காவி, காபி
கொட்டை நிறம்
, தாமரை பூ நிறம், பன்னீர் ரோஜா நிறம், மஞ்சள், பொன்வண்டு , நிறம், பாசிப்பச்சை, பொன்னிறம், பழுப்பு நிறம், வெந்தய நிறம் எலுமிச்சை நிறம், செப்புநிறம் – கபிலம், மயில்கழுத்து , கத்திரிப்பூ நிறம், ஜவ்வு மிட்டாய் நிறம், நாவல்பழ நிறம், வாடாமல்லி நிறம், ராணி பிங்க், காபி நிறம் , கரும்பச்சை ,கிளிப்பச்சை, மயில்பச்சை, தளிர்ப்பச்சை, மாம்பச்சை, பாசிப்பச்சை, மரகதப் பச்சை, பாசிப்பயறு நிறம்னு, மீனாக்க்ஷி பச்சை பலநிறங்கள் ஆராயப்பட்டன. அகலக்கரை , சன்ன கரை, ஒன்னு, ரெண்டு, மூணுனு விரல்கடை அளவுக்கு ஜரிகைகள் விவரிப்பு / தீர்மானிக்கப்பட்டது.
மாப்பிளைக்கு விரதத்துக்கு வேஷ்ட்டி , 9X5 மயில் கண் முகூர்த்த வேஷ்டி, சோபனத்துக்கு பட்டு வேஷ்டி, ஜானவாசத்துக்கு சூட்டு/கோட்டு (Suit and Coat) ,மத்தவாளுக்கும் வேஷ்டி-அங்கவஸ்திரம், சட்டைகள், வாத்தியாருக்கு குண்டஞ்சு வேஷ்டி வாங்கப்பட்டன.
பட்டு சரசரக்க, பன்னீரும், சந்தனமும், பன்னீர் ரோஜாவும்
மணக்க , அற்புதமான அறுசுவை உணவுடன் கஸ்தூரி கல்யாணம் நாலு நாள்
கொண்டாட்டமா இனிதே முடிந்தது.
பட்டுபுடவைகளின் சிறப்பான , அம்சமான வடிவமைப்பு, ,
துடிப்பான , கண்கவர் வண்ணங்கள், பிரம்மாண்டமான தங்கம் மட்றும் வெள்ளி நிற பார்டர்கள்,
கம்பீரமான தோற்றம் அளிக்கும் வடிவமைப்புகள், இதன் செழுமை இவை அனைத்தும் சேர்ந்து கல்யாணங்களை
எடுத்துக்
காட்டும் , மங்களம் பயக்கும்.
The history of
silk weaving in India can be traced back to the ancient tamil civilization (getting
unearthed in Keezhadi, Madurai), Indus Valley Civilization and then on. The history
of silk saree and its auspiciousness if stated in every epic and literature of India,
irrespective of culture, creed and region. These beautiful and exquisite
creations, are have distinct weaving techniques in different regions showcasing
the brilliant skills of talented and artistic weavers. These weaving practices age-old
structures which has been passed down through generations, thereby preserving and
upholding the valuable and rich cultural heritage of India. Silk is a mark of bountifulness, abundance, happiness, vibrant hues of joy and divinity!

Comments
Post a Comment