Skip to main content

விண்ட அதிரசம்

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­



வாசலில் கேட் சப்தம் …, அடுத்து  ரேழியில் அரவம்... மாமி …” என்று கூவி கொண்டே ராஜி மாமி ஆஜர். காலை 11 மணி session இது. The women of every household would meet in a common place to spend time or do some job together.

ராஜலக்ஷ்மி @ ராஜி மாமி எங்க தெரு வாசி. அவாகம்  தான் கோடி ஆகம். அப்புறம் பெரிய தரை கிணறு இருக்கும் . நான் சின்னப்போ ,பல நாள் அங்கே தான் உலகம் முடியறதுனு  நெனச்சிண்டிருந்தேன்! அவ்வளவு பெரிய கிணறு . The street ended there.

எங்கப்பாட்டி ராஜி மாமி வீட்டை தெலுங்காள் ஆகம்னு சொல்லுவா . அவாத்து நிரந்தர வாசகர்கள் - பத்மா மாமி - ராஜி மாமியோட மாமியார்-பத்மா , வெங்கட்ராம ஐயர் ாமனார், அவரோட அம்மா சீத்தம்மா(பாட்டி) , ராஜி மாமி ஆத்துக்காரர் சந்திரசேகரன், and floating population - அடிக்கடி turn போட்டுக்கொண்டு வந்து போகும் ஆறு நாத்தனார் குடும்பங்கள் - இது தான் ராஜி மாமி ஆகம். அப்போதெல்லாம் , அநேக ஆகங்களில் நித்ய கல்யாணம், பச்சைத்தோரணம் தான்.

இப்போ ராஜி மாமி  11 மணி sessionகு வந்ததுக்கு காரணம் அதிரசம்! அதிரசத்துக்கும் ராஜி மாமி எங்காத்துக்கு  வந்ததுக்கும் காரணம் -  நம்மாத்துல மாவு திரிக்க எந்திரம் இருக்கு. அதைவிட எந்திரத்த ஓட்ட, திருகு சுத்த நாங்க இருக்கோம் ! பாட்டி மேற்பார்வைல நடக்கும். சுத்தும்போது  குழந்தைகள் மாவை வாயில போட்டுக்காம பார்த்துப்பா . அவ்வளவு ஏன்! மாவரைக்கும் போது பேசக்கூடாது . எச்ச சாரல் பட்டுத்துனா அதுக்கு மாபணமே கிடையாதாம். So my பாட்டி held the ultimate authority in preparing மடி மாவு. The entire street entrusted her.

அந்த காலகட்டத்துல மாவு திரிப்பது வீட்டிலேயே தான். நடு மிதத்துல சுத்துஉரல் எந்திரம் இருக்கும்.அதுல தான் பாட்டியின் தலைமையில் மாவு அரைக்கப்படும். வெள்ளை வேஷ்டியில் விழும் திரித்த மாவை சலித்து எடுப்பது பாட்டியின் வேலை. She is the final deciding authority on the consistency of the flour!

ஆத்துல பச்சரிசியை தயார் பண்ணினுட்டு வந்திருக்கா ராஜி மாமி. பண்டிகை இல்லை எந்த ப்ரமேயமுமில்லை , ஆனா அதிரசம் தட்ட காரணம்?அவாத்து மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி @ கிமு வாறார் . மதுரைக்கு பக்கத்துல மேலூர் தான் சொந்த ஊர் .அவருக்கு அதிரசம் பிடிக்கும் .ராஜி மாமி அதுக்கு தான் மாவு ஏற்பாடு பண்ண வந்திருக்கா.  ராஜி மாமி பத்மா பாட்டியின் ஒரே நாட்டுப்பொண் ( மாற்றுப்பெண் ). ஆகையால் அதிரசம் செய்யது முடிப்பதும் அவள் வேலைதான்! வாத்து சீதம்மா பாட்டி பாகு பதம் பார்த்து தருவா , ராஜி மாமி மா கிளறுவா, பத்மா மாமியும், சீதம்மா பாட்டியும் தட்டி போட அதிரசம் சபையேறும்.

கிருஷ்ணமூர்த்தி @ கிமு , ராஜி மாமி இரண்டாவது நாத்தனாரின் ஆத்துக்காரர். கொஞ்சம் முசுடு - காரணம் அவர் கல்யாணத்தில் நடந்த சம்பவம் . நிதானமா இருக்காரேன்னு சந்தோஷபட்டுக்க கூடாது க்ஷண புத்தி க்ஷண மாத்ர”(  क्षण बुद्धि क्षण मात्रा |) . திடீர்னு நிர்வசன சம்பாஷணைக்கு மாறிப்பார் . யாருக்கும் என்ன நடந்துனே தெரியாது.

திரு .கிமு ,பார்யாளுடன் மாமியார் வீட்டுக்கு வருவார். (அந்த நாத்தனார் மாமி பெயர் சகுந்தலா, But கி.மு மட்டும் தன் சகதர்மினியை சக்கு என்று அழைப்பார்!). திரு .கிமு எப்போதும் மாமியார் ஆத்துல யதார்த்தமா இருக்க மாட்டார். தன் தலையை கூட ஒரு 65 degrees obtuse angle from right shoulder எப்போதும் தூக்கி வச்சிண்டிருப்பர். ரசம் கூட தாளிக்கறதுக்கு முன்னாடி எடுத்துவெச்சிடணும். பரிமாறும் போது பந்தியிலே தனி ரசம் மாப்பிள்ளை கிமு.விற்க்கு வரும். பந்தியில்கூட அவர் லை தான் முதல் இலை . இப்படி எல்லாமே exclusive treatment! The family never considered this unsaid demand as a selfish preference for unique treatment and also seldom underestimated the expectations!

 “கால் காஸானாலும் கவரமாண்டு (Government) காசு வாங்கும் மாப்பிள் ஆச்சே! நாம தான் அரவணைச்சுண்டு போகனும்டி ராஜி னு என்னோட பாட்டி புத்தி சொல்லுவா. Ki. Mu’s activities were considered normal and people around him embraced with “Acceptance”.

ிமு, அவாத்துல ஒரே பிள்ளை .அவ்வளவு ஏன் …. அவா ஸ்ரீவத்ச கோத்ரத்துக்கு ஒரே வாரிசு. வெங்கட்ராமண ஐயர் (ராஜி மாமியின் மாமனார் ) சாந்தா, சகுந்தலா என்று அடுத்தடுத்து பிறந்த பெண்களுக்கு ஒரே நாளில், ஒரே முஹுர்தத்தில்  கல்யாணம் பண்ணினார். மாப்பிள்ளை ரகுராமனுக்கு ( H/O Shantha) , Bankல வேலை .நம்ம கிமு கு , PWD officeல வேலை.

தன் ஒரே பிள்ளையின் கல்யாணத்தை தாம் தூம்னு கொண்டாடணம்ன்னு சுந்தரி மாமியின் ( Ki.Mu ‘s Mother) கனவு. அனால் பாவம் ஒன்றோடு ரெண்டா கல்யாணம் முடிந்தது. இதுவே ஆறாத குறை அவர்களுக்கு. இதுதான் அவாத்துல நடந்த கல்யாண பிசகு. நாலு பேர் முன்னால நல்ல பெயர் எடுக்க அன்னிக்கு தலை ஆட்டிவிட்டு ஆயுசு பரியந்தம் குத்திக் காட்டும வகையறா, சுந்தரி & Co.! But seems that they treated Sakunthala well. நம்மாத்து குழந்தை குந்தலாவை நன்னா வெச்க்கறா என்ற ஒரே காரணத்துக்கு அனைவரும் அடகு போயினர்.

சாந்தா ஆத்துக்காரர் ஸ்ரீ. ரகுராமன் , தன்னுடைய ஒரு அக்கா, இரு தங்கைகளுக்கு கல்யாணம் செய்த பின் தானும் செய்து கொண்டார். தகப்பனுக்கு தோள் கொடுத்தவர்! So, அவருக்கு விண்டு போன அதிரசம் கூட இலையில் போடலாம், கோபமே வராது. ஒரு வகையில் முழு அதிரசத்தை விட விண்ட அதிரசம் தேவலாம் , முழுசாவா சாபிடமுடியும் ? விண்டு சாப்பிடற வேலை மிச்சம் என்பார் ரகுராமன். This theory was applied to Dosai, murukku and other eatables. He has evolved as an Optimist and had a tendency to see the good in people, and bright sides. He had gained a high level of maturity by the age of 28 years. ரகுராமன் , மாமனார் ஆத்துக்கு வந்தால் கண்டிப்பா எங்க எல்லாரோட அதுக்கும் வந்திட்டு போவார்.He was branded as Down to earth person and sometimes taken for gratned!

இதே போல தான் எங்க தெருவில் எல்லார் வீட்டிலும் , விவகாரங்களிலும் , எல்லாருக்கும் பங்கு இருந்தது . மறைமுகமாகவோ அல்லது நேராகவோ சுக துக்கங்களில் பங்கேற்று கொண்டனர் . The courtyard (மித்தம) was always accessible to everyone in every house. Monthly Ration, வாங்க போகறது கூட மாதவ ராவ் - சாக்கு மாமியாத்து வாசலில் அணைத்து பெண்டீரும் கூடி புறப்படும் வழக்கம் இருந்தது. அந்த Listல எங்காத்து கமலாவும, ராஜி மாமியாத்து அமுதாவும் ( they were Stay-in Maids) உண்டு. Saaku mami was the last-born child in a family of 13 Children in that household. She was named Saaku because there was a belief that if the new born is named Saaku”, there will not be another child birth!

மேலே உள்ள பத்திகளில், நடுத்தர ப்ராமண வீடுகளில் நடந்த சம்பவம் மற்றும் அதை ஒட்டிய சம்பாஷணைகளும், கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடன் சுமுகமாக இருந்த அண்டை அயலார் வீடுகளின் அந்யோயமும், பரஸ்பர உதவிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னாளில், க்கு மாமி - கிமு மாமாவாத்து ரெண்டு பெண் குழந்தைகளுக்கும் , தாய்மாமா சந்திரசேகரன் - ராஜலக்ஷ்மி , தம்பதி தலையீட்டில் தான் கல்யாணம் ஆச்சனு கேள்வி ! A Practice appears attractive first, easy next, eventually become obvious and satisfying and finally permanent! Here in this house hold, and even in our street, Mr. Krishnamoorthy, perceptually enjoyed privilege and attention!

The societal bondage and physical connect in person were very strong and was never obliterate in the yesteryears. There are different elements in the human understanding, anticipation, and creation of reality and there were always many people who live together to form a “society” and to be with us when we were in need. There were advisors, customs, values, norms, rules all interwoven and well knitted.

There were many “மாப்பிள்ள, ஆத்துக்காரர், நாட்டுப்பெண், ாமியார், நாத்தனார், மச்சினன்and other people with a mind in the superiority of its own perspective (call it EGO!). The degree of indeterminacy about a one’s mind or ego was complicate and was fairly dealt with intrusions and pacification. There were general unwritten, yet institutionalized rules amongst people.

The human world even now has many irresolvable ambiguity and contingency. but as a society we are one. It is high time to bring back this personal physical network in today’s situation also. Though we are all connected virtually, all of us collectively disconnected now!




PS - Athi + Rasam
Athi - A superlative degree of "Very"
Rasam - A sensor indicator - Taste
The meaning is same in Both the languages , Sanskrit and Tamil

 

Comments

Popular and Most Visited Post

பெயர் சூட்டல் - नामकरणम् - A causal talk

  “அம்மா விஷயம் தெரியுமோ? நம்ம சுகவன அண்ணா , கொழுந்தனின் பையன்னுக்கு வரன் அமஞ்ஜியிருக்காம் , பொண்ணு  பேரு அவையாம்பாள்   @ ஸ்வேதா னு சொன்னா” என்று சேதி சொல்லிண்டு உள்ளே வந்தார் ஸ்வாமிநாதன் மாமா.  “பொண்ணாத்துக்கார மயிலாடுதுறையா ?” என்று வினவினாள் லலிதா மாமி சுவாமிநாதனின் அம்மா. “நோக்கு எப்படி மா தெரிஞ்சுது” என்று ஆஸ்ச்சர்யமா கேட்டார் ஸ்வாமிநாதன்.” அம்பாள் பேரு - அழகா கொழந்தைக்கு வெச்சிருக்காளேடா!” என்றாள் லலிதா மாமி. “உனக்கும் கூட நம்ம குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பேருதானேடா வெச்சிருக்கு” , அது தானே வழக்கம் என்றாள். ஸ்வாமிநாதன் சிந்திக்கலானார் . ஆம் , அவர் பார்யாள் பெயர் பர்வதவர்த்தினி @வித்யா . அவா  ராமநாதபுரத்துக்காரா .இப்பொழுது Second generation சென்னைவாசிகள். ஸ்வாமிநாதன் என்னவோ வித்யா மாமியை இன்று வரை “வித்து(विधु).… வித்து(विधु)” என்று இருந்த நாலெழுத்தையும் சுருக்கி செல்லமா கூப்பிட்டு கொண்டிருக்கிறார்!  குளித்து சந்தி பண்ணிவிட்டு இட்லி சாப்பிட உட்கார்ந்தார் ஸ்வாமிநாதன். இந்த லோகமே விரிந்து தட்டையாக்கி விட்டாலும் நம்ம ஸ்வாமிநாதன் மாமா சந்தி பண்ண...

One Nation One Subscription (ONOS) – Ministry of Education, The Government of India

  One Nation One Subscription –   Ministry of Education, The Government of India India has a rich intellectual heritage that spans millennia from as early as 5000 BCE. Ancient knowledge was transmitted orally during numerous subsequent generations so far and only in the recent millennium, the existing knowledge is being archived in written form. The wisdom and knowledge that have emerged on the soil of India is rooted in the Vedas passed through generations. I am on continual interdisciplinary study bridging the ancient wisdom and knowledge to the present technology transformations. My research work is more of study, systematic inquiry and observation of ancient science and literature, in Tamil and Sanskrit and interpreting results in English, which is methodical yet far away from single-factor foci. I have to work on different search interfaces, including physical library visits to search for books, Journals, Interpretations and reference case points. Persistence....