“அம்மா விஷயம் தெரியுமோ? நம்ம சுகவன அண்ணா , கொழுந்தனின் பையன்னுக்கு வரன் அமஞ்ஜியிருக்காம் , பொண்ணு பேரு அவையாம்பாள் @ ஸ்வேதா னு சொன்னா” என்று சேதி சொல்லிண்டு உள்ளே வந்தார் ஸ்வாமிநாதன் மாமா.
“பொண்ணாத்துக்கார மயிலாடுதுறையா?” என்று வினவினாள் லலிதா மாமி சுவாமிநாதனின் அம்மா. “நோக்கு எப்படி மா தெரிஞ்சுது” என்று ஆஸ்ச்சர்யமா கேட்டார் ஸ்வாமிநாதன்.” அம்பாள் பேரு - அழகா கொழந்தைக்கு வெச்சிருக்காளேடா!” என்றாள் லலிதா மாமி. “உனக்கும் கூட நம்ம குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பேருதானேடா வெச்சிருக்கு” , அது தானே வழக்கம் என்றாள்.
ஸ்வாமிநாதன் சிந்திக்கலானார் . ஆம் , அவர் பார்யாள் பெயர் பர்வதவர்த்தினி @வித்யா . அவா ராமநாதபுரத்துக்காரா .இப்பொழுது Second generation சென்னைவாசிகள். ஸ்வாமிநாதன் என்னவோ வித்யா மாமியை இன்று வரை “வித்து(विधु).… வித்து(विधु)” என்று இருந்த நாலெழுத்தையும் சுருக்கி செல்லமா கூப்பிட்டு கொண்டிருக்கிறார்!
குளித்து சந்தி பண்ணிவிட்டு இட்லி சாப்பிட உட்கார்ந்தார் ஸ்வாமிநாதன். இந்த லோகமே விரிந்து தட்டையாக்கி விட்டாலும் நம்ம ஸ்வாமிநாதன் மாமா சந்தி பண்ணாமல் இருந்ததில்லை. என்ன, ப்ராத சந்தியாவந்தனம் (प्रातः सन्ध्यावन्दनम् ), மாத்யானிக்கம்(माध्यानिकम्) ரெண்டும் காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போகும் முன் முடிச்சுடுவார் . samApanam (समापनम्) ஸ்லோக்கம் - காயே ந வச்சா..... ( कायेन वाचा मनसेन्द्रियैर्वा, बुद्ध्यात्मना वा प्रकृतेः स्वभावात्, करोमि यद्यत्सक्लं परस्मय, नारायणयेति समर्पयामि ) மட்டும் கொஞ்சம் பலமா சொல்வர். அன்னன்னிக்கே, அப்பவே பிராயஸ்சித்தம் பண்ணிண்ட திருப்தி அவருக்கு. He ardently followed his Nithya samskarams. Come what may!
அன்று
ஞாயிற்றுகிழமை. காலை பொழுது. மெத்தனமாக நகர்ந்து
கொண்டிருந்தது. ஆகையால் , எண்ணப்போக்கும் பெயர் ஆராய்ச்சியும் தொரடர்ந்தது . லலிதா
( she inherited the name from her maternal grandma) மாமி
ஜபம் பண்ணின்டிருந்தா. ஸ்படிக மணி பாட்டுக்கு Involuntaryயா விரல் இடுக்கில் லாவகமாக உருட்டி எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால் மாமிக்கு எப்பொழுதும் சர்வலோக பார்வை இருக்கும் - argus-eyed, . நிஸ்சிந்த்தையா இருக்க மாட்டா அதுவும் , வித்து
மாமி அடுக்குளையில் இருக்கும் போது 15 கஜம் (1 கஜம் is almost equal to 0.91 Meters) தள்ளி
இருக்கும் ரேழியில் உக்கார்ந்திண்டே, அடுப்படில கொதிக்கிற ரசம் இறக்கிவெக்க
ஆச்சுனு சொல்லிடுவா. Her
olfactory senses were also exceptionally good. எப்படியாவது
ஈய சொம்ப்பை காப்பாற்றுவது என்று ஒரு குறிக்கோள் . அவையங்கள் அனைத்தும்
அவ்வளவு தீக்க்ஷிண்யம் ! அதுவும் “வித்து (विधु)” மாமியை
ஏகசிந்தயா Monitor பண்ணறதுல காண கச்சிதம்.
Reason: 1. Who said that Household chores are not do not have metrics? may be, it cannot be quantified in monetary terms,
but the older women of the household had magical qualifying scales to measure
the activities and work of the daughter in law.
2. This house has a history of Melting Rasam pots which always resulted
in invigoration or novelty of saving the ஈய சொம்பு .
ஜபம் முடித்துவிட்டு ,லலிதா மாமி மெதுவா Name list ஒன்று சொல்லலானாள், இத கேளுடா சாமிநாதா – வைத்தியநாதன் (பூர்விகம் vaitheeswaran koil) மாமாவாத்து மாமி ப்ரஹதாம்பாள் (பூர்விகம் Pudhukottai), சுந்தரேச சித்தப்பா (Madurai) , நீலாயதாக்க்ஷி சித்தி (பூர்விகம் Nagappatinam) , ஆபத்சகாயம் தாத்தா (பூர்விகம் Valangaimaan) , அத்திம்பேர் ப்ரணதார்த்திஹரன், சங்கமேஸ்வர பெரியப்பா (பூர்விகம் Bhavani), அப்பாவோட colleague சங்கரநாராயண மாமா , அவா அம்மா காந்திமதி பாட்டி (பூர்விகம் Tirunelveli), அருணாச்சல வாத்யார்(பூர்விகம் Tiruvannamalai) ,சாரதா (SringaGiri matam devotee) இப்படி நிறைய ஊரை சார்ந்து பேருவெக்கற வழக்க நமக்குண்டு, என்று சம்பாஷணை தொடங்கினாள்.
இப்பவும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி பேரு வச்சிருந்தா கண்டிப்பா பூர்விகம் கண்டுபிடிக்கலாம் டா என்றாள். முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்களெலாம் கூட க்ருதிகளிலே க்ஷேத்திர பெருமையும் பகவான் மகத்துவத்தையும் பாடிருக்கார், என்றாள்.
பெயர் காரணம் தொடர்ந்தது….ஆடி பூரத்தில் பிறந்த லலிதா மாமியின் தங்கை பெயர் அகிலாண்டேஸ்வரி. புனர்பூசம் நக்ஷத்திரம் பையன் என்றல் ஸ்ரீராமன் அல்லது ராமஸ்வாமி அல்லது ராமமூர்த்தினு பேரு வெப்பா, ஸ்வாதி நக்ஷத்திரம்னா லட்சுமி நரசிம்மன், ஆருத்திரா நக்ஷத்திரம்னா நடராஜன் / சிவகாமி. சனிக்கிழமைகளில் பிறக்கும் வெங்கடேசன், ஸ்ரீநிவாசன, கோவிந்தன், பத்மாவதி, அலமேலுமங்கை, நரசிம்ஹன் என்று name list தொடர்ந்தது. நம்மளவாள்ல ஜாதகர்ணம் (जातकर्मन्) , நாமகரணம் (नामकरण) சம்ஸ்காரம் இருக்கோயில்லயோ , அதுபடி நம்மாத்துக்கு உண்டான பேரு வெக்கணம் டா சாமிநாதா , என்று முடித்தாள்.
இதெல்லாம் சரிடா , ஆனா அதுல ஹாஸ்யம் என்னேன்னாகா அழகா ஸ்வாமிப்பேரு , பெருமாள்பேரு வச்சுட்டு கூப்பிடறது என்னவோ சுருக்கங்களா சீமாச்சு ( Srinivasan ), ஈயாமு ( Eswara Moorthy) , ஜித்து / சித்து ( Seetharaman) , பஞ்சு ( panchapakesan / Panchanathan) எச்சு ( Lakshmi), நிம்மி( Nirmala), நாமு ( Namagiri lakshmi) , கிச்சாமி ( Krishnaswamy) , நானு(narayanan) , சச்சு(Saraswathi) ரெங்கு( Renganathan or Rengarajan), வரது ( varadharajan),சேஷு ( seshadri ) , காமு ( Kamakshi) , வெங்கிட்டு/ வெங்கி ( vekataraman), ஜகந்நாதன் மாமா - ஜக்கு மாமா ,கீமூ( Krishna Moorthi) , விசாலி ( Visaalakshi), சுப்புணி (Subramani or subramanaiam), விச்சு(Viswanathan), கோமு (Gomathi), பத்து ( Padmavathi) , கல்பு ( kalpagam) , பப்பி ( Padmini) இப்படி பல விசித்திர சுஷ்கங்கள்.
அம்மா நெனவிருக்கா , பேரு குறுக்கி எழுதி உதை பட்ட , பக்கத்தாத்து நாராயண ராவ் பிள்ளை , ஹனுமந்த ராவின் லீலை ? . பள்ளியோடதுக்கு (பள்ளிக்கூடம்) வந்த புது வாத்தியார், தண்டலம் தில்லைநாயகம் பிள்ளையை -"தத்தி " என்று எழுதி மாட்டிக்கொண்டான். அப்பறம் என்ன the next one week he was an 'Out-Standing Student" of the class. Today, He is one of the State Planning Commissioner, Government of India! His Out-of-Box thinking has helped!!
இப்போ,இதில ஹரிஹர ஐயராத்து, “கோண்டு”வின்(Govindhan) நாமகரணத்தின் சுஷ்க அலங்காரத்தின் பிரதிபலிப்பை சொல்லறேன் கேளு.. கோண்டுவுக்கு,ஏழு வயதில் வடகரை அக்ரஹாரத்தில பூணல் போட்ட பொது தான் அவனுக்கு அவன் பெயர் கோவிந்தன் னு தெரிஞ்சது. பள்ளியோடத்துல ( பள்ளிக்கூடம் ) சச்சி (sacthitanantham)மாமா தான் மூணாங்கிளாஸ்சு வரை வாத்தியார். அவர் , கண்ணை ஒருக்கா சுழற்றினால் , இருக்கற இருப்பது பேருல யார் வரலைனு தெரிஞ்சிடும்.
He recorded his daily attendance by looking around the class. He never called children by names as he strongly believed that he can be productive by adding some more மனக்கணக்கு practice during that time. So no one was called Govindan or the others by his or her name in the class for recording attendance.
உபநயனதன்னிக்கு கோண்டுவுக்கு ப்ரவரம்(प्रवर) சொல்லித்தரப்பட்டது. பெரியவாத்யார்’s assignee சொல்லிக்கொடுக்கும் போது , சர்மா நாமா சொல்லும்போது உன் பெரு சொல்லிக்கொன்னு synopsized version சொல்லிக்கொடுத்துட்டான். அப்புறம், நமஸ்கார படலம் வந்தது. அபிவாதயே சொல்லும் போது “அபிவாதயே….....யஜுர் சாகா அத்யாயி ,”கோண்டு: சர்மா நாம அஹம் அஸ்மி போஹோ “ னு சொல்லிட்டான் !! First hit – sarma nama swapped! அத்தனை பெரும் சிரிச்சூட்டா. அவன் , அப்பாவியா , "ஙே" என விழித்தான்.அந்த அளவுக்கு கோண்டுனு கூப்பிட்டு... கூப்பிட்டு கோவிந்தன் என்கிற அவன் பேறே அவனுக்கு தெரியாம போச்சுடா.
பின்னாளில் இந்த கோண்டு வளர்ந்து , கோண்டண்ணா (கோண்டு + அண்ணா ) கோண்டு சித்தப்பா / பெரியப்பா ஆகி, கோண்டு அத்திம்பேர் ஆகி (அவர் மச்சுனன் ,மச்சினிகள் கூப்பிடறச்சே “கோண்டத்திம்பேர்” ஆகிவிட்டது அவர் பெயர்!), பின்பு கோண்டு மாமா ஆகி இப்பொழுது கோண்டு தாத்தா / கோண்டையர் என்று அழைக்கப்படுகிறார்.
The next level of narration was more interesting to be heard! Gondu Thatha’s Grandson, born in America inherited the patronymic name! கோண்டுவின் சீமந்தபுத்திரன் ஹரி அவரோட பிள்ளைக்கு கோவிந்த் (Govind ) என்று நாமகரணம் செய்தார். The afro-American teacher in the school with permissions, wrote the name as Gowind (Go-wind) which was retained as-is for convenience of calling and pronunciation! ஐயகோ! கோண்டு .. Go-Wind ஆகிவிட்டாது, என்று முடித்தாள், லலிதா மாமி.
வித்து மாமி கஞ்சி கலயம் , லோட்டா கொண்டுவந்து கொடுத்தாள் லலிதா மாமிக்கு. இந்த சம்பாஷணை தற்காலிக நிறைவு பெற்றது.
My thoughts here as Sri. Swaminatha mama ponders further on this subject— Our names have very specific identities, and many of them are more aligned to the society, sects, places, emotions, and memories. The names are also “Geographical indicators,” which help us in knowing our roots, clan, and our attributes. Names are usually got from the paternal lineage. Some families follow the tradition of retaining the name of the hometown, the grandfather's name, the grandmother’s name, or both. There are shortened names too! Shortened names are considered intimate, reserved, and easy to call for the closest friends and family, and they suggest a level of familiarity that you have gained.
Comments
Post a Comment