“அம்மா விஷயம் தெரியுமோ? நம்ம சுகவன அண்ணா , கொழுந்தனின் பையன்னுக்கு வரன் அமஞ்ஜியிருக்காம் , பொண்ணு பேரு அவையாம்பாள் @ ஸ்வேதா னு சொன்னா” என்று சேதி சொல்லிண்டு உள்ளே வந்தார் ஸ்வாமிநாதன் மாமா. “பொண்ணாத்துக்கார மயிலாடுதுறையா ?” என்று வினவினாள் லலிதா மாமி சுவாமிநாதனின் அம்மா. “நோக்கு எப்படி மா தெரிஞ்சுது” என்று ஆஸ்ச்சர்யமா கேட்டார் ஸ்வாமிநாதன்.” அம்பாள் பேரு - அழகா கொழந்தைக்கு வெச்சிருக்காளேடா!” என்றாள் லலிதா மாமி. “உனக்கும் கூட நம்ம குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பேருதானேடா வெச்சிருக்கு” , அது தானே வழக்கம் என்றாள். ஸ்வாமிநாதன் சிந்திக்கலானார் . ஆம் , அவர் பார்யாள் பெயர் பர்வதவர்த்தினி @வித்யா . அவா ராமநாதபுரத்துக்காரா .இப்பொழுது Second generation சென்னைவாசிகள். ஸ்வாமிநாதன் என்னவோ வித்யா மாமியை இன்று வரை “வித்து(विधु).… வித்து(विधु)” என்று இருந்த நாலெழுத்தையும் சுருக்கி செல்லமா கூப்பிட்டு கொண்டிருக்கிறார்! குளித்து சந்தி பண்ணிவிட்டு இட்லி சாப்பிட உட்கார்ந்தார் ஸ்வாமிநாதன். இந்த லோகமே விரிந்து தட்டையாக்கி விட்டாலும் நம்ம ஸ்வாமிநாதன் மாமா சந்தி பண்ண...
Comments
Post a Comment