தீவிட்டி கொள்ளைக்காரர்கள்
சுக்லபக்க்ஷ துவிதியை …… நாங்கள் எல்லாரும் மித்ததில சாப்பிடறதுக்கு கூடினோம். மேலே பிறை நிலா கொஞ்சமா தெரிஞ்சுது. அன்னிக்கு Power , Cut ஆகையால் நிலாச் சோறு எங்களுக்கு. கமலி மாமி பெரிய பாத்திரத்தில குழம்பு சாதம் பிசைந்து கொடுத்தாள். “கொஞ்சம் தளர பிசஞ்சு கொடும்மா கமலி”, குஞ்சு பாட்டி அக்ஞை ப்ரஸ்தாரிச்சுண்டே கீழே உற்கார்ந்துண்டா. குமுட்டி அடுப்பில உளுந்து அப்பளம் சுட பட்டுக்கொண்டிருந்தது. புடலங்காய் பொரிச்ச கூட்டும் இருந்தது தொட்டுண்டு சாப்பிட. நாங்களும் சுத்தி உற்காந்துண்டோம். கதை ஆரம்பமானது. இன்னிக்கு எங்காத்துல சுண்டக்காய் வத்த குழம்பு . - கொஞ்சம் வெல்லமும்,நல்லெண்ணெய்யும் தூக்கலா இருக்கும்.
எங்க பாட்டி (It is Kunju Paatis'- Paati)குழந்தையா இருக்கறச்ச ... ஏன், நான் குழந்தையா இருந்தப்போவும் ,இந்த மாதிரி “கரண்டு” (Electric Current and lights) விளக்கு கிடையாது.( Exact Time line – Please date this era as 140 Years before 1980 = approx. 1840 A.D), லாந்தர்(Lantern) விளக்கும் குத்து விளக்கும் தான் வெளிச்சம் தரும். தெருவில் தீவட்டிகள் உபயோகிப்பார்கள் ( A flambeau / Torch). She remembered almost every incident of her childhood in great detail. She transported all to the bygone era of her Granny “Dharumi” (Dharmaambal) - Here, My Grandpa intruded in a whisper saying - "This event happened Before The Sepoy Mutiny"
Paati, narrated the story to us as
follows:
சேம்பரம்(Chidambaram) -கவரப்பட்டு- இது தான் எங்க கிராமம். மூணு போகம் வளையும். கொள்ளிடம் கடலிலே சேரும் இடம். உளுந்து விளையும் , நெல் விளையும், காய் கனி விளையும், எல்லாம் விளையும். ….. பொன் விளையும் பூமி அது. கவரப்பட்டு குளம் எப்போதும் நெறஞ்சு இருக்கும்.எல்லாருமே மிட்டா மிராசுக்கள் தான். பண்ணையம் பண்ணறவா.எல்லறத்துலேயும், ரெட்டை மாட்டுவண்டி உண்டு. நிறைய பணம் நகை உண்டு .அப்போ எல்லாம் பேங்க (Bank) கிடையாது. அதனால பணம் - நகைகளையும், உசத்தி பொருள்களையும் ஆத்துலேயே வெச்சிண்டிருந்தா.
அப்போதெல்லாம் எல்லா வீட்டிலும் ஒரு ஜன்னலில்லா இருட்டறை உண்டு. அந்த உள்ளில (Room) சுவற்றிலோ , தரையிலோ ஒரு சின்ன
இரும்பு பொட்டி பதிச்சிருக்கும் . அதோட தொரக்கோல் (சாவி), வேற இடத்துல
இருக்கும். யாருக்கும் தெரியாது.அந்த உள்ளில தான் பணம் , நகை ,சொத்து பட்டயம், இத்தயாதிகள் வெச்சுப்பா. சில வீடுகளில் பூஜை
அறையில் இரும்புப் பெட்டி பாதிச்சிருக்கும்.ஒரு கக்க்ஷம் இல்லேன, பேழைல நகைகள்
இருக்கும். இதெல்லாம் அந்த பெரிய பெட்டில வெச்ச பூட்டிடுவா. சில உருபிடிகள், அடுக்களை, சாமான உள்ளிலே கூட
இருக்கும்.
வக்கீல் வரதராஜ ஐயர் வீட்டில அவருடைய அலுவல் அறை (Office Room) ஒரு ரகசிய இடம் .வெள்ளைக்காரன் ஆண்ட
காலத்துல மதராஸ் மாகாணத்துல பெரிய வக்கீல் அவர். அவருக்கு, பட்டணத்துலயும் ஜாகை உண்டு நிறைய பணம். அவாத்து
பாக்யலட்சுமி கல்யாணத்துக்கு பச்சைக்கல் நகை வகையறா, சிகப்புக்கல் நகை
வகையறா, வைர நகை வகையறானு நிறைய பண்ணினா . வெள்ளி பாத்திர செட்
மதராசுல, செட்டியார் கிட்ட சொல்லி பண்ணிண்டு வந்தார். இதை சொல்லும்போது
குஞ்சு பாட்டியின் கண்களில் வைரம் மின்னும். அப்படி ஒரு பரவசம்! Engrossed in that excitement, நாங்களும் எச்சா (Extra) ரெண்டு உருண்டை வாங்கி சாப்பிடுவோம். அப்படி ஒரு வர்ணனை
திறன், குஞ்சு பாட்டிக்கு.She
actually explained every handcrafted piece of jewellery, the craftsmanship and
the cultural background, though she has not seen any. Maybe, Her grandmother
should have explained here these details!
குஞ்சு பாட்டி கையில் இருந்த உருளியில் சாதம்
பூர்த்தியானதை பார்த்து , கமலி மாமி இன்னொரு
பாத்திரத்தில் அவசரமா சாதம் பிசைந்துகொண்டு வந்தாள். உருளிகள் கைமாறின.… கதையும் தொடர்ந்தது.
அந்தப் காலத்துல தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் என்ற ஒரு வகைத் திருடர்கள் , நல்ல இருட் காலத்தில் கூட்டமாக வந்து சூறையாடிச் செல்லும் நிகழ்ச்சி, அடிக்கடி நடந்து வந்தது. கொள்ளைக்காரர்கள் பத்துப், பன்னிரண்டு பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொருவருவர் கையிலும் ஒரு சிறு தீவட்டியும் இருக்கும். அவா முன்கூட்டியே வரதை பத்தி ஓலை அனுப்பி சொல்லிடுவா. கிராமவாசிகள் ஒப்புதல் ஓலை அனுப்பிடுவா. அவாஎல்லாம் குதிரை எறிவருவாளாம். கருப்பு துணியால முகமெல்லாம் மூடியிருப்பாளாம்.
கையில் ஓங்கிய அரிவாள். இடுப்பில் பிச்சுவா , சித்தருவா
(சிற்றருவாள்), தாம்பக்கயிறு மற்றோர் கையில் பலாக்கம்பு, சவுக்கு கம்பு, தோல் சாட்டை ,ஈட்டி, கடப்பாரை, சுத்தி, அறம் இப்படி பல
ஆய்தம் ஏந்தி வருவாளாம். Here, Actually She has taught us about a plethora
of tools that were in use those days!
கருகருனு ( Here her tongue would make
extraordinary vibration while pronouncing the syllable “ரு”) ஆறடி உயரம், வாட்டசாட்டமான
உடல்கட்டு - போருக்கு தயாரா வரவா போல வருவாளாம் . அடிதடி கொலைக்கு
அஞ்சமாட்டா. அவா நம்ம கம்பளத்து
நாயக்கர் பேசற பாஷை போல பேசுவாளாம். அநேகமா எல்லோருமே ஆறடி உயரம், வாட்டசாட்டமான உடல், மதயானை போல சரீரம், பலத்த, கனத்த ஆகிருதியோட
இருப்பாளாம். பிடிபடாம இருக்க, உடம்பெல்லாம்
விளக்கெண்ணெய் தண்டவிண்டு பளபளனு இருப்பாளாம். காட்டு
வழியில் பயணிப்பதால், பூச்சி
கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணையும் பூசிக்கறது உண்டு.அநேகமா எல்லாரும் நெத்தியில தீர்கமா விபூதி
இட்டுண்டிருப்பாளாம்.
கமலி மாமி எடுத்துண்டுபோன உருளியை கழுவிட்டு , பொறுக்கற சூட்டில்
குழைவா, கொஞ்சம் தளர ரசம் சாதம் பிசஞ்சிண்டு வந்தா. உருளிகள்
திரும்பவும் கைமாறின .கதையும் தொடர்ந்தது. ரசம் ஓட ஓட
இருக்காது . அள்ளி சாப்பிடற மாதிரி சாதம் இருக்கும். Though she was engaging us with her stories, her
ultimate goal was “No Child is left Hungry” and every Child has his/her morsel
of food according to their ages.
இந்த கொள்ளைக்காரா, கூட்டமா
வடக்கிலிருந்து வரவானு சொல்லுவா.கோதாவரி,கிருஷ்ணா நதிக்கரையோர காடுகள்ல இருக்கறவானு எங்க
மங்களம் மாமியாத்து மாமா, ஐகோர்ட்டு வக்கீல் ( Lawyer in
High court) கிருஷ்ணஸ்வாமி ஐயர் சொல்லுவாராம்.
அவாளுக்கு பரம்பரை தொழிலே, கொள்ளைதானாம்.
எங்க கிராமத்து வாசிகள் வம்பு, சண்டைக்கு போகமாட்டா. ஆகையால் ஓலை வந்த உடனே நெல்மூட்டை, உளுந்து மூட்டை, பணம், தங்க காசு , வெள்ளி எல்லாம் எடுத்து வெச்சுடுவா. ஊர் பெரியவா எல்லாம் மந்தைல காத்திண்டிருப்பா.அவா வந்த உடனே பண்டம் கை மாறும் . பொதி சுமக்கும் குதிரைகளில் ஏற்றி அனுப்பிடுவா . ஒவ்வொரு ஊருக்கும் வேறே வேறே பொதி சுமக்கும் கூட்டம் வரும் அவாளோட . இந்த தீவட்டி கொள்ளைக்கார கூட்டம் பொதுவா மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாசங்களிலே தான் வருவாளாம். ( Non Rainy season!) . அதுவும் அம்மாவாசை அன்னிக்கு தான் வருவா. காட்டிலுள்ள வழிகள் அவாளுக்கு கரத்தலை பாடம். அதனால சரியா சொன்னபடிக்கு வந்துடுவாளாம். இவாள பார்த்தா வெள்ளைக்காரனுக்கே பயமாம். அவாள(The robbers) கண்டா, கண்ட இடத்துல சுடலாம்னு வெள்ளைக்கார துரை ஆடறு (Order) கொடுத்துட்டானாம்.ஆனா, அவா மட்டும் சிக்கினதே இல்லயாம். அவா குலதெய்வம் அவாள காப்பாத்திண்டே வருமாம்.
அவா(As
per the robbers expectation..!) எண்ணம்போல கிராமத்துல
இருக்கறவா கொடுத்துட்டா ஒரு பிரச்சனையும் இல்லை. இல்லேன்னா வீடு புகுந்து
சூரையாடிடுவா .. ஆடி, உதை, குத்து கூட விழும். அவாளை
பொறுத்தமட்டில் , எவனோ பரங்கியான் கொள்ளை அடிக்கும் போது , நாம ஏன் பண்ணக்கூடாதுனு தான் எண்ணம். வராதராஜ மாமா, இவாள்ளாம் திருடறதை , மக்கள் கப்பம் கட்டுவது போல பாவித்ததா
சொல்லுவா.
கொள்ளைக்காரா வர அன்னிக்கு ஊர்
பெரியவா கொஞ்சம்பேர் பண்ட பாத்திரம், திரவியங்கள், இத்யாதிகளோட ஊர் மந்தையில்
நின்னிடிருப்பா . தெலுங்கு பேச தெரிஞ்ச வேங்கடசாமி
நாயுடு மாமாவும், வெங்கட்ராமண ஐயரும் முன்ன நின்னுப்பா . எதிராஜூலு
செட்டியாருக்கு பயம் அதிகம் . தன்னோட கனத்த சரீரத்தை கஷ்டப்பட்டு
மறச்சிண்டு பின்னாடியே இருப்பாராம். இதை தவிர வீரண்ண
வாண்டையாரும் , காளியப்ப நாயக்கரும் தங்களோட ஆட்களோட இருப்பாளாம். வக்கீல் மாமாக்கள்
வெங்கட்ரமண ஐயருக்கு துணை ஆகமொத்தம். இவாளும்(The villagers) ஒரு பதினஞ்சு பேரு
தான் இருப்பாளாம் .
ராத்திரி ஒரு பத்து மணிக்கு அப்பறமா வருவாளாம் .
திடீர்னு ஆறேழு குதிரைகள் முதல்ல வருமாம். அதன் மேலே ஆரோகணிச்சு வரவா கைல தீவட்டி
இருக்கும் . அந்த குதிரைகள் நிறையா புழுதிய கெளப்பிண்டு
வருமாம். கொள்ளைக்காரள்ளாம் , தலைப்பா பின்கொசுவத்தால் மூக்கு, வாய் எல்லாம்
சேர்த்து மாறைச்சிருப்பாளாம் . குரல் மட்டும் கணீர்னு இருக்குமாம்.
மத்தபடி அவா யாருனே தெரியாதாம்.
இப்போ குஞ்சுப்பாட்டி எங்களுக்கு தயிர்
சாதம் போட்டுடிருந்தா, மாங்கா தொக்கு
தொட்டுக்கறதுக்கு- An exotic combination......தேவாமிருதமா இருக்கும். குழந்தைக்களுக்கு மோர் மிளகாய்
தரமாட்டா. சிலசமயம் வடாம் இருக்கும்.
யுத்தியில் கைதேர்ந்த அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன், தெலுங்கில அதட்டலா
சிலபல கேள்விகளை கேப்பானாம். அப்புறம் கொள்ளைக்காரர்களுடைய
சங்கேதமான ஒலி ஒன்று, “பண்டம்பாடிகள் தயார்” என்பதற்கு
அறிகுறியாகச் ‘சீழ்க்கை’ ( Whistle) ரூபத்தில் சப்தம்
எழுப்புவாளாம். இன்னும் நாலைந்து குதிரைகள் வருமாம். அவா கீழே இறங்கி
கட்டிவெச்ச மூட்டைகளை தூக்கிண்டு , எல்லோரும் ஒரே
சமயத்தில் விருட்டுனு கிளம்பி வந்த திக்குல
மறஞ்சிடுவாளாம், என்று சொல்லி முடித்தாள். சாப்பாட்டு கடையும்
முடிந்தது. அப்புறம் கிராமத்திலே இத பத்தி யாரும் பேசவே மாட்டாளாம்.
Eventually, the populations of robbers and robbery grew vastly after the
abolition of Zamindari system and the pro-British upper castes grabbing and
owning fertile lands which paved to highly-unequal social formation. The workers
were maintained on old
feudal methods of giving food, clothing not even fulfilling basic needs. These
inequalities lead to a revolution wherein violently charging and earning
livelihood by exploiting and robbery became a way of life.
There was also another practice. During
the British rule, the kings who lost to the British and freedom fighters who lived in exile received support via
these clan of people. Maybe, because of that the people were amiable and paid
the people who collected money and food, though they were robbers!
Jai Hind
Comments
Post a Comment