"அடி குட்டி, சித்த வாசலாண்டா பாரு , ராஜா சாப்பிட வந்தானானு, ராவேளை எங்கேயாவது ஊர் சுத்திண்டிருப்பான் , கூப்பிடு அவனை ,” என்றாள் பாட்டி. ஒருபிடி சாதத்ததை எடுத்து மோர் விட்டு அழுத்த பிசையலானாள் “ராஜாக்கு சாதம் எடுத்துண்டாச்சு, பத்தை ஒழிச்சு போட்டுடலாம்”, என்று முணுமுணுத்தாள் . அகிலா பத்து ஒழிச்சு தேய்க்கும் காரியத்தில் இறங்கினாள்.
“டீ லக்ஷ்மி, ஒன் மன்னி பத்து ஒழுச்சு தேய்க்க உக்காந்துட்டா, நீ புஸ்தகத்தை வெச்சிண்டு உக்காராதே, அடுப்படியை
மொழுகி கோலம் போடு”என்று ஆக்ஞை பிறப்பிதாள். சிமெண்ட் பூசிய தரையானாலும் பசுஞ்சாணத்தால் தான் தினமும் அடுப்படி
மெழுகும் வழக்கம் இருந்தது எங்காத்துல. அரிசிமாவு கப்பி கோலமாவா உரு எடுக்கும் - ultimate reuse of resources. கொஞ்சம் மைதா மாவு கலந்து கோலம் போடுவா. தரையே பளிச்ச்சுன்னு இருக்கும். This will be a stunning combination of a dark mossy green
background decorated with beautifully laid interlaced patterns in smoky white.
சரி , நம்ம ராஜாவின் கதைக்கு திரும்புவோம். குழைத்த சாதத்தில் இன்னும் கொஞ்சம்மோர் விட்டு பிசையலானாள் பாட்டி. எப்பொழுதும் ராஜாவுக்கு மட்டும் மோர் சாதத்திற்கு
உப்பும் இல்லை, தொட்டுக்க ஊறுகாயும் இல்லை. மத்யானங்களில் சிலநாள் குழம்போ , அடி ரசமோ ராஜாக்கு போடுவா.அது ஸ்ரேஷம் (श्रेषम्) தங்காம இருப்பதற்கு வழுச்சு போட்டுட்டு பத்து தேச்சு காமுத்திடுவா. அன்னிக்கு ராத்த்திரி
கண்டிப்பா மிளகு குழம்பு சுட்ட அப்பளம் தான் Menu for dinner.
கச்சட்டியை (கல்
சட்டி ) குமுட்டி
அடுப்பில ஏத்தி குழம்பு பண்ணுவா பாட்டி . நல்லெண்ணெய்யும் பெருங்காயமும்
ஜோடிசேர்ந்து புளி கரைசல்ல கொதிச்சு சுண்டும் போது வீடு என்ன....
ஊரே மணக்கும்! அப்பறம் தொட்டுண்டு சாப்பிட அந்த குமுட்டி தணலில் அப்பளம் சுடும் படலம் அரங்கேறும். சில நாள் மிளகு ரசம் கூட சேர்த்து செய்யுவா பாட்டி.
Again back to Raja - எங்காத்துல , ஸ்ராதத்தன்னிக்கு ராஜாவுக்கு வீட்டு சாப்பாடு கிடையாது. கிருஷ்ணா ராவ்
மாமா மெஸ்ல (Mess) இருந்து ஒரு
கலந்த சாத பொட்டலம் வரும் . அதே சமயம் பின்னங்காட்டில் ஒதுங்கி இருக்கும் பெண்டிருக்கு Carrier சாப்பாடு வரும். இது
ப்ரஹ்மச்சாரியா இருந்த முரளி மாமாவுக்கு assigned duty.
அன்னிக்கு ராஜாவுக்கு திண்ணை சாப்பாடும் கிடையாது. வெளிவாசல்
வேப்பமரத்தடி திட்டுல வெச்சிடுவா சாதத்தை.அன்னிக்கு
அவனுக்கு வீட்டின் உள் எல்லைக்குள்( No entry Into the
compound) வர அனுமதி இல்லை.
மற்றப்படி ,ராஜாவுக்கு
எப்பொழுதும் ஆத்து வாசல்ல திண்ணையாண்ட சாப்பாடு . அவனுக்கு என்று ஒரு தட்டு உண்டு .
ராஜாவுக்கு ஒரு சொகுசும் கிடையாது. கட்டாந்தரையில் தூங்குவது தான் வழக்கம். பாட்டி அவனை வீட்டின் உறுப்பினர் பாவித்தாள். ஆனால் வாசப்படி தாண்டி உள்ளே வர அனுமதி இல்லை . He had Highly restricted and limited movements in our household! Thought he had a father and mother form Rajapalam, he was orphaned at the age of 6 weeks!
“பிராரப்தகர்மா,
இவனுக்கு தின்னைல போட்டிருக்கு ஜாகை” என்று பரிதாபப்பட்டு கொள்வாள், பாட்டி.
He was my accompanier to school and my bag was always carried on his back. Thus all of us have a story with interlaced experiences of Raja.
இவ்வளவு பெருமைக்குரிய இந்த ராஜா யார் தெரியுமா? எங்கள் வீட்டில் வளர்ந்த ராஜபாளையம் கோம்பை வகை நாய்!
He was actually adopted in a desperate situation.
சுப்ரமணிமயபுரம்ல பக்கத்தாத்து போலீஸ் மயிலசாமி மாமா ( that is how we called strangers, irrespective of cast creed, religion, Only age matter to classify as அண்ணா , மாமா or தாத்தா) , மாற்றலாகி போகும் போது அவர், ஆறு வார குட்டி ராஜாவை விட்டு சென்றார் . அன்றிலிருந்து ராஜாகக்கு எங்காத்துல ஜாகை.
ராஜா ஒரு வேட்டை
நாய் , but Pure Vegetarian, “பிராமணா
வீட்டு நாய், அடுத்த ஆத்துல கூட சாப்பிடமாட்டான்” என்று தெருவில் நல்ல பெயர் எடுத்தவன். A highly
intelligent , sensitive, having a very good olfactory sensation and particularly he was a well
mannered dog, though his wild genetics were strong. He never crossed the
stipulated limits. காரணம் இன்றி குறைத்தது கூட இல்லை!
எங்காத்துல தோட்டம் இருந்ததால ராஜா காவலுக்கு
வளர்க்கப்பட்டான். அந்த நாளில்
பிராமணர்களின் வீடுகளில் பிராணிகள் வளர்ப்பது அரிது. தேவை இல்லாத பொருட்கள் கூட எதுவுமே அப்போதெல்லாம்
வீட்டில் இருந்ததில்லை.
அப்படி நாய் வளர்த்தாலும் அது வீட்டிற்கு
வெளியில் தான் இருக்கும் . அடுத்த தெரு மலேசியா செட்டியார் வீட்டிலேயும்
அப்படிதான். அவாத்து ஜிம்மிக்கும் வெளித்திண்ணை வாசம் தான்.
The above events and practices have been written to describe the discipline, customs and people's behavior in a Hindu society in the past years. These good habits and traditions edify society as a whole!
In general, the Hindus have a lifestyle more aligned to ritualistic routine and cultural practices. Cultural practices influence various psychological factors; be it intelligence, well-being, morality, or emotional balances and ethics /behavior, which lead to a very healthy and contented livelihood. We never owned anything that was not needed to lead our daily life. This list included domesticated animals at home!
Comments
Post a Comment